Saturday, July 16, 2011

ஹாரி பாட்டர் 7

7-21-07

மூனு மாசம் முன்னாடியே, நான் லேண்ட்மார்க்ல  ரிசர்வ் பண்ணிட்டேன். விடிய காலையில அஞ்சரை மணிக்கே என்னை வரச் சொன்னாங்க.

வீட்டிலிருந்து அவ்வளவு சீக்கிரமா ஸ்பென்சர் பிளாசா போக முடியாது. அதனால முதல் நாள் நைட்டு நான் ஆபிஸில் தங்கிட்டேன்.  எங்கூட சுபமும் (நண்பர் சுப்பிரமணியன்) எனக்காக ஆபிஸில் இருந்தார்.

அவர் இன்டர்நெட்டுல் கடைசி புத்தகத்தை பத்தின எல்லா ரூமர்ஸையும் சத்தமா படிச்சிட்டே இருந்தும், நான் கொஞ்சம் கூட கண்டுக்கலை.

என்னோட ஒரே கவலை, ஹாரி பாட்டர் கடைசியா செத்துடுவாரோ?
நல்ல எழுத்தாளர்னு பேர் வாங்கறதுக்காக என்ன வேனும்னாலும் செய்வாங்க!

காலையில சீக்கிரமா எந்திரிச்சு அஞ்சரை மணிக்கு முன்னாடியே போயிட்டோம். அன்னிக்குத்தான் முதல் முறையா இருட்டான ஸ்பென்சர் பிளாசாவை பார்த்தேன்.

எங்களுக்கு முன்னாடி லேண்ட்மார்க்குல பெரிய வரிசையே நின்னுட்டு இருந்துச்சு. நிறைய  சின்ன பசங்க, அவங்க பேரண்ட்ஸ் கூட இருந்தாங்க. அப்புறம் நிறைய பொண்ணுங்க அவங்க பாய் ஃபிரண்ட்ஸோட இருந்தாங்க. குறிப்பா ரெண்டு பொண்ணுங்க விட்ச் மாதிரியே டிரஸ் பண்ணியிருந்தாங்க.

சுமார் ஆறு மணிக்கு ஒரு குட்டிப் பொண்ணு கேக் வெட்டி, முதல் ஹாரி பாட்டர் புத்தகத்தை சந்தோஷமா வாங்குச்சு. சந்தோஷமா நாங்க எல்லோரும் கை தட்டினோம், சத்தம் போட்டோம்.

கையில புத்தகம் வாங்கின எல்லோர் முகத்திலும் சிரிப்பு, சந்தோஷம்.

நானும் பாக்கிப் பணத்தை கொடுத்து, பெருமையோடு புத்தகத்தை வாங்கினேன். சாப்பிடறதுக்கு, எல்லோருக்கும்  பர்கர் கேக் ஜூசு சும்மா கொடுத்தாங்க.

கேக்கை கூட கண்டுக்காமல், சின்ன பசங்கதான் ஜாலியா இருந்தாங்க. சின்ன பசங்கதான் ரொம்ப என்ஜாய் பண்றாங்கன்னு, சுபம் சொன்னாரு.

அன்னிக்கு முழுவதும் எங்கயும் நகராம, புத்தகத்தை படிச்சு முடிச்சேன்.



இன்னிக்கும் என் வாழ்க்கையில் பெருமையான விஷயமா நினைக்கிறது, நான் ஹாரி பாட்டர் புத்தகத்தை முதல் நாளே வாங்கினதும், படிச்சதும்தான்.

*****

முதல்ல ஹாரி பாட்டர் புத்தகத்தை பத்தி எதுவும் தெரியாது. முதல்ல ஹாரி பாட்டர் சினிமாவைத்தான் ரிலீசான அன்னிக்கே பார்த்தேன். அதுவும் வேற படம் எதுவும் ரிலீஸ் ஆகாததால பார்த்தேன்.

முதல் பாகம் பிடிச்சதால, ரெண்டாம் பாகம் ரிலீசானவுடனே பார்த்தேன். அதுக்கப்புறம்தான் ரௌலிங்கை பத்தியும் புத்தகத்தை பத்தியும் பேப்பர்ல படிச்சேன்.

அதுவரைக்கும் நாலு ஹாரி பாட்டர் பாகங்கள்தான் எழுதி இருந்தாங்க. அதோட விலையை விசாரிச்ச போதுதான் தெரிஞ்சது, ரெண்டாயிரம் ரூபாய்!

காலேஜ் முடிச்சு, வேலைக்கு போய் சம்பாதிச்சதும் வாங்கனும்னு முடிவெடுத்தேன்.

நான் சென்னை வந்து வேலையில சேர்ந்தும், அதுவரைக்கும் வந்திருந்த ஆறு ஹாரி பாட்டர் பாகங்களையும் (பைரேட்டட் புத்தகங்கள்) வாங்கினேன்.

முதல் முறையா நைட்டு ரெண்டு மணி, மூனு மணி வரைக்கும் தூங்காம, முழிச்சிருந்து ஆறு புத்தகங்களையும் நான் படிச்சேன்.

ஏழாவது புத்தகத்துக்காக காத்திருந்தது இருக்கே, அது ஒரு பொண்ணுக்கிட்ட லவ்வை சொல்லிட்டப்புறம் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறதை விட கொடுமையான விஷயம்.

கடைசி புத்தகத்தையும் முதல் நாளே வாங்கி படிச்சு முடிச்சேன்.

ஹாரி பாட்டர் கதை முடிவு சந்தோஷத்தை கொடுத்தாலும், ஒரு நல்ல தோழியோட திருமணம் கொடுத்த சந்தோஷம் மாதிரிதான் இருந்துச்சு.

இனி நம்ம கூட இல்லைன்னாலும், நினைவுகளை புரட்டுகிற மாதிரி, ஹாரி பாட்டர் புத்தகங்களையும் எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம்.

*****

கதைல ஒருத்தர் இறக்கும் போது, மனசுல கணத்தை உணர்ந்திருக்கீங்களா?
இந்த புத்தகத்தில டாபி (Dobby) சாகும் போது உணர்வீங்க.

கதையில் ஒருத்தரோட அன்பை புரிஞ்சுக்கும் போது, நெகிழ்ந்து போயிருக்கீங்களா?
ஸ்நேப்-ஐ (Snape) பத்தி தெரியும் போது, எப்படி இருக்கும்னா..
ராமாயனத்தில் குகனோட இருப்பிடத்தில பரதன் ராமரை சந்திக்கிறதை படிக்கும் போது கண்ல தண்ணீர் வருமே, அது மாதிரி இருக்கும்.

ஹாரி பாட்டர் புத்தகத்தை படிச்சீங்கன்னா, கண்டிப்பா நீங்களும் விரும்புவீங்க!

**** 

பின் குறிப்பு:

அட்லான்டிஸ் காம்ப்ளக்ஸ் ("Atlantis Complex" - 7th book in "Artemis Fowl" series)  புத்தகத்தில் வர ஹீரோ ஆர்டிமிஸ், நம்பர் 5 மேல அடிக்ட் ஆயிடுவாரு. அதனால அவர் பேசறது எல்லாம் அஞ்சு (அல்லது அஞ்சின் மடங்கா) வார்த்தைகள் இருக்கற மாதிரி, எழுதி இருப்பார்.

எனக்கு இந்த கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு. 7 -தான் ஹாரி பாட்டர் புத்தகத்தில் வர மேஜிக் நம்பர். அதனால அர்த்தம் வருதோ இல்லையோ, ஒவ்வொரு வரிகளிலும் 7 ( அல்லது 7ன் மடங்கா) வார்த்தைகள் இருக்கிற மாதிரி , இந்த பதிவை எழுதி இருக்கேன்.
படிச்சுப் பாருங்க! எண்ணிப் பாருங்க!

No comments: