Saturday, July 28, 2012

நான்



நான் என்று கூறும்போது உன் மனம் பிரபஞ்சம் நோக்கி விரிவடையட்டும். பிரபஞ்சத்தை ஒருபோதும் உன்னை நோக்கி குறுக்காதே.

- விஷ்ணுபுரம் புத்தகத்தில் படித்தது.


'நான் செய்தேன்' என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.

நானா செய்தேன்? என்று கேட்டால், 'நான் மட்டும் இல்லை' என்றுதான் பதில் கிடைக்கிறது.

நான் செய்யும் செயல்கள் எல்லாம், எல்லோரும் சேர்ந்து செய்யப்படுவதாய் இருக்கிறது.

என் சிந்தனைகள் கூட, மற்றவர்களின் தாக்கத்தால் உருவாகிறது.

இங்கு எல்லாமே எல்லோராலும் சேர்ந்து செய்யப்படும்போது, எப்படி நான் என்பது 'என்னை' மட்டும் குறிக்கும் வார்த்தை ஆகும்?

பன்மை அர்த்தத்தை மறந்து, ஒருமையில் நான் என்று விளிக்கும்போது அகங்காரத்தை மீறி முட்டாள்தனம்தான் புலப்படுகிறது.

நான்தான் இங்கு எல்லாமே!