Monday, March 1, 2010

புது வருட சபதங்கள்

புது வருட சபதங்கள்.

மார்ச் 1 2010

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தில், டைரியில் எழுதப்படும் புது வருட சபதங்கள், இம்முறை யோசிப்பதற்குள் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.

அதனால் என்ன? ஒவ்வொரு வருடமும் எதையும் நிறைவேற்றியதாக நினைவிலில்லை.

Julie & Julia - ஆங்கிலத் திரைப்படம். ஜுலி (Julie) 524 ஃபிரஞ்ச் உணவு வகைகளை 325 நாட்களில் சமைப்பதாக அவளுடைய blog ல் எழுதுவார்கள். எப்படி அதை சமைத்து முடிக்கிறார்கள் என்பதையும் எழுதுவார்கள். இது ஒரு உண்மைச் சம்பவம். இன்டர்நெட்டில் பார்க்கலாம்.

அது போல் என்னுடைய இவ்வருட லட்சியங்கள்.

1. தினமும் உடற்பயிற்சி செய்யப்போகிறேன். குறைந்தப்பட்சம் Walking போகப்போகிறேன்.
2. தினமும் யோகா செய்யப்போகிறேன்.
3. நீச்சல் கற்றுக்கொள்ளப் போகிறேன்.
4. ஃபிரென்ச் (French) மொழி கற்றுக்கொள்ளப் போகிறேன்.
5. வயலின் வாசிக்க கற்றுக்கொள்ளப் போகிறேன்.
6. Skating கற்றுக்கொள்ளப் போகிறேன்.
7. கார் ஓட்டக் கற்றுக் கொள்ளப்போகிறேன்.
8. நானே டெலஸ்கோப் செய்யப் போகிறேன்.
9. வாங்கி, இன்னும் படிக்காத புத்தகங்களை படித்து முடிக்கிறேன்.

அ) சு.ரா வின் செம்மீன், அழைப்பு & தொலைவிலிருக்கும் கவிதைகள்
ஆ) சுஜாதாவின் சிலப்பதிகாரம் & புறநானுறு (படிக்காமலிருக்கும் பாடல்கள்)
இ) வாலியின் பாண்டவர் பூமி
ஈ) Lord of the rings - The two tower (half) & Return of the king
உ) stephenie meyer’s The host
ஊ) Isaac Asimov Foundation series
எ) Stanley Gardner’s The case of the Baited Book
ஏ) Sherlock holmes - complete collection of novels & short stories
ஐ) H.G. Wells’s The Time Machine, The invisible man ,The war of worlds & The Island of Dr. Moreau
ஒ) Philp Pullman’s The Tiger in the Well

10. வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகங்கள்
அ) Stephen King’s The Dark Tower series (7 books)
ஆ) Philp Pullman’s His Dark Materials (3 books)

11. IAS தேர்வுக்கு கணக்கு படிக்கப்போகிறேன்.
12. பொது அறிவுக்காக நாளிதழ்கள் படிக்கப்போகிறேன்.
13. இனிமேல் கண்ட இடங்களில் குப்பை போடாமல், குப்பைத் தொட்டியில் மட்டும் போடப்போகிறேன்.
14. ரயிலைப் பிடிப்பதற்காக தண்டவாளத்தை தாண்டிக் குதிக்க மாட்டேன்.
15. ரயிலில் சத்தமாக செல்போனில் பாட்டுக் கேட்பவர்களின் மீது கோபம் கொள்ளமாட்டேன்.
16. ஒரு நாளைக்கு இரண்டு படங்களுக்கு மேல் பார்க்கமாட்டேன்.
17. தினமும் குளிக்கப் போகிறேன்.