Tuesday, May 18, 2010

மனிதம்

'இறைவா..
எனக்கு எவ்வளவு வருமானம் கிடைத்தாலும்..
எவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தாலும்..
எவ்வளவு பெரிய பதவி கிடைத்தாலும்..
எப்பொழுதும் சகமனிதர்களை மனிதர்களாய் நேசிக்கும்
மனிதத்தன்மையை கொடுத்து விடு! '


IAS பரீட்சை எழுதப் போகிறேன். தொன்னூற்றொன்பது சதவிகிதம் நிச்சயம் தேர்வாகிடுவேன்.
அதனால்தான் இந்த வேண்டுதல்!


பார்க்க கூடாதுன்னு நினைச்சேன். இருந்தும் 'அங்காடி தெரு' சினிமாவை பார்த்திவிட்டேன். ஜவுளிக்கடையில் வேலை செய்பவர்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்த முடியும் என்று காண்பித்தார்கள்.

ஹிட்லர் யூதர்களை கொடுமைப் படுத்தியது..
காலனியாதிக்கத்தில் மற்ற நாடுகளை அடிமைப் படுத்தியது..
ஒவ்வொரு நாடும் ராணுவக் கைதிகளை துன்புறுத்தியது..
எப்பொழுதும் மனிதர்கள் மனிதர்களை நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்..
இது பழகிப்போன விஷயம். இதைப்பற்றி இங்கு விவரிக்கப் போவதில்லை!

நம் நாட்டில் கண்ணில் படக்கூடிய சில..

கட்டிட வேலையில் மேஸ்திரி சகதொழிலாளிகளிடம்..
டீ மாஸ்டர் டம்ளர் கழுவும் பையனிடம்..
அரசு அழுவலகங்களில் பெரிய பதிவியில் இருப்பவர் தனக்கு கீழ் வேலை செய்பவரிடம்..
முதலாளிகள் தொழிலாளிகளிடம்..
குடிம்பத்தலைவிகள் வீட்டு வேலை செய்பவரிடம்..
ஏன் ஐடி அழுவலகங்களில் கூட பிராஜக்ட் மேனஜர் தனக்கு கீழ் வேலை செய்பவரிடம்..
ஏதேனும் ஒரு சமயம் எல்லா இடங்களிலும் சகமனிதர்களை மனிதர்களாய் மதிக்கப்படுவதில்லை; நடத்துவதுமில்லை!
நாமும் அப்படித்தான்..

ஒவ்வொருவரும்
தனது பொருளாதாரத்திற்கு கீழ் இருப்பவர்களிடமும்
தன்னைவிட குறைந்த பதவியில் வேலை செய்பவர்களிடமும்
ஆதிக்க குணம் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது..

நாம் மனிதத்தன்மையை இன்னும் இழந்துவிடவில்லை
மறக்கத்தான் செய்கிறோம்..

அதனால்..

இறைவா..
எனக்கு எவ்வளவு வருமானம் கிடைத்தாலும்..
எவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தாலும்..
எவ்வளவு பெரிய பதவி கிடைத்தாலும்..
எப்பொழுதும் சகமனிதர்களை மனிதர்களாய் நேசிக்கும்
மனிதத்தன்மையை கொடுத்து விடு!



Thursday, May 13, 2010

இயல்பு

இயல்பு - இந்த வார்த்தைக்குத்தான் நான் அதிகம் அர்த்தம் தேடியிருக்கிறேன்.
என்னுள் அடிக்கடி கேட்டுக்கொள்வதும் - நான் இயல்பாக இருக்கிறேனா?
I AM WHAT I AM என்ற பனியன் வாசகத்தின் உண்மையை புரிந்து கொள்ள இந்த முயற்சி.
நான் - இப்படிப்பட்டவன் என்று நன்றாக எனக்குத் தெரிகிறது. இம்மியளவும் என்னால் மாற முடிவதில்லை.
வேறுமாறி இருக்கும் போது, நான் இயல்பாக இருக்கமுடிவதில்லை. எனக்கு நானாகவே தெரிவதில்லை. வளைந்த இரப்பர் இயல்புக்கு வருவது போல், என் இயல்புக்கு வந்துவிடுகிறேன்.
மற்றவர்களின் இயல்பையும் , சில சமயம் அவர்களின் இயல்பற்ற நிலையையும் காண முடிகிறது.
இயல்பற்று இருக்கும் போதும் சிலரால் இயல்பாக இருக்கமுடிகிறது.
இயல்பு என்பது இங்கு இயல்பற்றதோ? இயல்பற்றதுதான் இங்கு இயல்போ?
இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது !