Saturday, January 22, 2011

என்ன தப்பு


இதில என்னங்க தப்பு?



அவன் அப்படி என்ன தப்பா சொல்லிட்டான்! அதுக்கு போயி இப்படி அவனை அடிச்சிருக்க கூடாது.

இந்த வயசுல ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட முத்தம் கொடுப்பேன்னு சொன்னா தப்பா? நீங்களே சொல்லுங்க.

அவன் மூனாங் கிளாஸ் படிக்கிறான். அந்த பொண்ணை அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. அவ பேர் *** கூட பிடிக்காது.

காலாண்டு பரீட்சையில அவன்தான் ஃப்ர்ஸ்ட் ரேங்க். அந்த பொண்ணு செகண்ட் ரேங்க். அவன்தான் கிளாஸ் லீடர். யார் ஃப்ர்ஸ்ட் ரேங்க் வாங்குறாங்களோ, அவங்கதான் லீடர்.

லீடர்னா ஒரு ஜாலிதான். கிளாஸ்ல பேசுறவங்க தலையில கொட்டலாம்; ஸ்கேலால அடிக்க கூட செய்யலாம். அவன் அதிகமா கொட்டுனது அந்த பொண்ணு தலையிலதான்.

டீச்சர் கிளாஸ்ல இருந்தா கூட, பேசுறவங்க பேரையெல்லாம் போர்டுல அவனைத்தான் எழுதச் சொல்லுவாங்க. ஒருதடவை ஆறுமுகம் ஸார் தமிழ் பரீட்சை பேப்பர்ல, அவனைத்தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் ரவுண்டு போடச் சொன்னார். லீடர்ங்கிறது ராஜ வாழ்க்கை.

இங்கிலீஸ்ல மார்க்கு குறைஞ்சதால, அரையாண்டு பரீட்சையில அவன் செகண்ட் ரேங்க்; அந்த பொண்ணுதான் ஃபர்ஸ்ட் ரேங்க்; லீடர். அவளும் பழிவாங்கற மாதிரியே, கிளாஸ்ல அவன்தான் எப்ப பாரு பேசுறான்னு டீச்சர்ட்ட மாட்டிவிட்டுடுச்சு. முதல் தடவையா டீச்சர்ட்ட பெரம்பாலா அடிவாங்கினான்.

அன்னிக்கு டீச்சர் லீடரை கிளாஸை பார்த்துக்கச் சொல்லிட்டு போயிட்டாங்க. அந்த பொண்ணு, பேசுற பசங்க பேரையெல்லாம் போர்டுல எழுதிட்டியிருந்துச்சு.

"பார்றா, அந்தப்பக்கம் பேசுற பொண்ணுங்கள்ள எவ பேரையும் எழுதல." அவன் பக்கத்திலிருந்த ஞானத்துக்கிட்ட சொன்னான்.

உடனே அவன் பேரை போர்டில் எழுதினாள்.

"என் பேரை ஏன் எழுதன? என்ன திமிரா"

"நீ ஞானசேகர்ட்ட குசுகுசுன்னு பேசல"

"நான் பேசவேயில்ல. நீ வேணுமின்ன எழுதற. முதல்ல அதை அழி"

"பேசாம இரு, அழிக்கிறேன்"

பேசிட்டிருக்காளே உன் ஃபிரண்டு குள்ள கத்திரிக்கா, அவ பேரை முதல்ல எழுது”

"அவளை குள்ள கத்திரிக்கானு கூப்பிட்ட, டீச்சர்ட்ட சொல்லிடுவேன்"

"எம்பேரை முதல்ல அழிடீ"

"டீன்னு கூப்புட்ட ஸ்கேலால அடிப்பேன்" கோபமாய் கத்தினாள்.

"அடிச்சுப்பாரு. அப்புறம் உனக்கு முத்தம் கொடுப்பேன்"

ஏதோ தெரியாமல் சொல்லிட்டான். அதுக்கு அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சு.. பசங்களெல்லாம் சிரிச்சு..  குள்ளக்கத்திரிக்கானு கூப்பிட்ட பொண்ணு ஓடிப் போயி டீச்சரை கூட்டிட்டு வந்து...

எத்தனை அடி! டீச்சர்ட்ட அடி.. ஹெட்மிஸ்டர்ஸ்ட்ட அடி.. அப்பாட்ட அடி.. அம்மாட்ட அடி..

*****

கல்லூரியில்..

"டேய்.. அவகிட்ட போயி கேளுடா" அவன் ஃபிரண்ட் சொன்னான்.

"சான்ஸே இல்ல."

"நீதான் எல்லா பொண்ணுக்கிட்டயும் கடலை போடறீல்ல. போய் கேளுடா"

"அந்த பொண்ணை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. நான் கேக்க மாட்டேன்"

"உன்னை என்ன முத்தமாடா கேக்கச் சொல்றேன். பிரிண்ட் எடுக்க ஏ ஃபோர் சீட்தான கேக்கச் சொல்றேன்"

"தயவுசெஞ்சு என்னை விட்டுடு. வேணுமின்ன நீயே கேட்டுக்க. நான் போறேன்"


*****

சுற்றியும் யாருமில்லை. அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். அவள் பேசும் போது உதடுகள் அழகாக  அசைந்தன. கொஞ்சம் தடித்த உதடுகள். சின்ன சின்ன வெடிப்புகள். லேசாய் ஈரப்பதம். ஜீராவில் கொஞ்ச நேரம் ஊறவைத்த ஜிலேபி மாதிரி இருந்தது.

"என்னடா பார்க்குற"

"இல்ல.. ஜிலேபி சாப்பிடனும்னு ஆசையாயிருக்கு"

"சாப்பிடலாம். உனக்கில்லாத ஜிலேபியா.."

கொஞ்சம் தைரியம் வந்தது. இங்கிலீஸ் படத்தில் பார்த்த கிஸ் சீன்களெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. சட்டென்று அவள் உதட்டில் ஒரு முத்தம் ( ஒற்றி எடுத்தான் ) கொடுத்தான்.

"டேய் என்னடா பண்ணுற" அவள் கோபமாய் தோள்பட்டையில் அடித்தாள். "இனிமே உங்கிட்ட பேசமாட்டேன்" உதடுகளை தொடைத்த படி எழுந்து சென்றாள்.

இதில என்னங்க தப்பு? இந்த வயசுல ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட முத்தம் கொடுத்தா தப்பா? நீங்களே சொல்லுங்க.

*****
கதைக்கு பின்..

நிச்சயமா நீங்க படிச்சது கதைதான். அப்படித்தான் நினைச்சு நான் எழுதினேன்.

கடைசியா, அவன் முத்தம் கொடுக்க முயற்சிக்கும் போது ( டிரைன்ல நின்னுக்கிட்டு வரும்போது ) தவறி விழுந்து சாகறமாதிரி எழுதலாம்னுதான், முதல்ல நினைச்சேன்.

பாவமா இருந்துச்சு. அதான் கடைசில முத்தம் கொடுத்துட்டான்.

இப்ப அந்த பொண்ணு பின்னாடி போயிட்டிருக்கான். வேற எதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு இன்னொரு முத்தம் கொடுக்கலாம்னுதான்.

16 comments:

Shalini(Me The First) said...

ஹைய்ய்ய்ய்ய்ய் வேர்ட் வெரிஃபிகேசன் இல்லே:)))))))))
நோ கமண்ட்ஸ் ஃபார் கமண்ட்ஸ்???

//கடைசியா, அவன் முத்தம் கொடுக்க முயற்சிக்கும் போது ( டிரைன்ல நின்னுக்கிட்டு வரும்போது ) தவறி விழுந்து சாகறமாதிரி எழுதலாம்னுதான், முதல்ல நினைச்சேன்.//

என்ன ஒரு வில்லத்தனம் :)))

//பாவமா இருந்துச்சு. அதான் கடைசில முத்தம் கொடுத்துட்டான்.//

எவ்ளோ பெரிய மனசு?!

Shalini(Me The First) said...

//இப்ப அந்த பொண்ணு பின்னாடி போயிட்டிருக்கான். வேற எதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு இன்னொரு முத்தம் கொடுக்கலாம்னுதான்//

அது தினேஷ் தானே? # டவுட்ப்பா

Shalini(Me The First) said...

/dineshgryffindor //

ஓ நீங்களும் நம்ம டீம் தானா?!!

அனு said...

ஹாய் ஷாலினி.. எப்படி இருக்கீங்க??

(எப்படியும் பதிவோட ஓனர் கமெண்ட்ட செக் பண்ண போறதும் இல்ல.. ரிப்ளை பண்ண போறது இல்ல.. அதான் உங்க கிட்டயாவது பேசலாமேன்னு. :) )

அனு said...

@ஷாலினி
///dineshgryffindor //

ஓ நீங்களும் நம்ம டீம் தானா?!!//

நீங்களும் செஸ் விளையாடுவீங்களா? சொல்லவே இல்ல..

Dinesh said...

@ஷாலினி

நீங்களும் gryffindor டீம்தானா?

@அனு

உங்க கமெண்ட்ஸை செக் பண்றதுதான் என்னோட முதல் வேலை!!

அனு said...

//உங்க கமெண்ட்ஸை செக் பண்றதுதான் என்னோட முதல் வேலை!//

யப்பா.. ஒரு வழியா respond பண்ணிட்டாருயா..
ஷாலினி.. கேட்டீங்களா.. கமெண்ட்ஸ் செக் பண்ணுறது தான் இவரோட முதல் வேலையாம்.. வந்து என்னான்னு கேளுங்க..

reg ur post: இந்த கதை க்யூட்டா இருக்கு.. ஒரு மினி லவ் ஸ்டோரி படிச்ச திருப்தி.. ஆனா, ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுற மாதிரி இருக்கு. என்னன்னு தெரியல.. (ஒரு வேளை பின்நவனத்துவ கதையா இருக்குமோ?)

அனு said...

//நீங்களும் gryffindor டீம்தானா?//

oh... u two talk HP?? i only tamil.. no englis.. i tamil book ok.. englis book no no.. u talk englis book.. i go...

Dinesh said...

பின் நவீனத்துவமா?? அப்படீன்னா!!!

//ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுற மாதிரி இருக்கு //

என் நண்பர் சொன்னார்.. கதைதான் மிஸ் ஆகுதுன்னு !

அனு said...

//பின் நவீனத்துவமா?? அப்படீன்னா!!!//

"எந்த கதையில் கதை இல்லயோ (அ) நமக்கு புரியவில்லையோ, அவையெல்லாம் பின் நவீனத்துவ கதையாக கருதப்படும்"ன்னு எங்க பக்கத்து வீட்டு பாட்டி சொன்னாங்க..

(ஷாலினி & ரசிகன்: என்னை இப்படி தனியா விட்டுட்டு எங்க போய்ட்டீங்க?? எங்க இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.. :) )

Unknown said...

Sondhaa Kadaiyaa sirrrr!!!! Climax ennanu sollavey illaye..

Shalini(Me The First) said...

Hi Dinesh!

//@ஷாலினி

நீங்களும் gryffindor டீம்தானா?
//

yeah me, a seeker ;)

என்ன கொடும டவுட் க்ளியர் பண்னாம என்ன இது ;)

Shalini(Me The First) said...

Hi Anu,
//ஹாய் ஷாலினி.. எப்படி இருக்கீங்க??
//

இவ்ளோ நாள் நல்லா தான் இருந்தேன் இனி தான் தெரியல :)))

//நீங்களும் செஸ் விளையாடுவீங்களா? சொல்லவே இல்ல..//
ஹா ஹா ஹா செஸ்னா சதுரமா ஒரு போர்டுல வட்ட வட்டமா காயின் வச்சு விளாடுவாங்களே அதுவா?

//ஷாலினி.. கேட்டீங்களா.. கமெண்ட்ஸ் செக் பண்ணுறது தான் இவரோட முதல் வேலையாம்.. வந்து என்னான்னு கேளுங்க//

என்னா தினேஷ்?
(கேட்டுட்டேன் அனு செக் அனுப்பிடுங்க)

Dhayalan said...

//ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுற மாதிரி இருக்கு //

// என் நண்பர் சொன்னார்.. கதைதான் மிஸ் ஆகுதுன்னு ! //

எதுக்கு இந்த MKP

அனு said...

@Dhayalan

//எதுக்கு இந்த MKP//

:-P

Dinesh said...

@Dhayalan

எல்லாம் உனக்காகத்தான், நண்பா.