Friday, June 24, 2011

ஹெய்டி


ஹெய்டி - இந்த புத்தகம் சிறுவர்களுக்கான நாவல். எழுத்தாளர் ஜோஹானா ஸ்பைரி 1880 ல் எழுதியது. இந்தப் புத்தகம் மிகவும் பிரபலமடைந்ததால், பல மொழில்களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஹெய்டி கதாபாத்திரம் இன்றும் பல கார்ட்டூன்களில் உலா வருகிறாள்.



நான் படித்த தமிழ் புத்தகம், எழுத்தாளர் ஸ்ரீமதி / கயல்விழி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் கதை சுவிட்சர்லாந்து மலைப் பிரதேசங்களில் நடக்கிறது. இந்த கதை படிக்கும் போதும், படித்த பின்பும் மனதிற்குள் பொங்கி வரும் சந்தோஷத்தை, அன்பாகத்தான் செலவழிக்க முடியும்.

முக்கிய கதாபாதிரங்கள்

ஹெய்டி - சிறுமி. எல்லாவற்றுக்கும் ஆச்சரியப்படுவாள். எல்லோர் மீதும் அன்பு செலுத்துவாள்.

பீட்டர் - ஹெய்டியின் நண்பன். ஆடு மேய்க்கும் சிறுவன். ஹெய்டி யார் மீதாவது அன்பு செலுத்தினால், அவர்கள் மீது கோபம் கொள்பவன்.

ஹெய்டியின் தாத்தா - தனிமையை விரும்புபவர். தன் கிராமத்து மனிதர்களை வெறுப்பவர். ஆனால் இயற்கையை நேசிப்பவர். ஹெய்டியால் எல்லோரையும் நேசிப்பவராய் மனம் மாறுகிறார்.

பீட்டரின் பாட்டி - கண் தெரியாதவள். அன்புக்கு ஏங்குகிறவள். பீட்டர் எப்படியாவது படிக்கவேண்டும் என்று ஆசைப் படுபவள். ஹெய்டியால்  நிறைவேறுகிறது.

கிளாரா - கால்கள் வலுவில்லாதால், நடக்க முடியாத சிறுமி. ஹெய்டியின் நட்பால், சந்தோஷம் அடைகிறாள்.

ஹெய்டி நகரத்துக்கு செல்லும் போது, நாமும் அவளைப் போல இயற்கையான மலைப் பிரதேசத்தை மிஸ்(miss) பண்ணுவோம்.

இந்த புத்தகத்தால் கூட அன்பின் மதிப்பை உணரமுடியும். முடிந்தால் படியுங்கள்!

சந்தோஷப்படுவதற்கு எளிய வழி, அன்பு செலுத்துவதுதான்.

1 comment:

ரசிகன் said...

//கதை படிக்கும் போதும், படித்த பின்பும் மனதிற்குள் பொங்கி வரும் சந்தோஷத்தை, அன்பாகத்தான் செலவழிக்க முடியும்.//
:) Blissful usage of Language.