Sunday, June 12, 2011

ஏலியன்! அவதார்!


ஏலியன் , அவதார் படம் பார்த்திருக்கீங்களா?
இந்த பதிவு இந்த படங்களை விமர்சனம் செய்வதற்காக இல்லை. ஆனாலும் அந்த படங்களோட கதையை முதல்ல சொல்லிடறேன். 



ஏலியன்
நான்கு பாகங்கள் படமாய் வந்திருக்கு. நம்ம மனிதர்கள் ஒரு வேற்று கிரகத்தில இறங்குவாங்க. அங்க நிறைய ஏலியன் முட்டைகள் இருக்கும். அதிலிருந்து பயங்கிரமான ஏலியன் வந்து மனிதர்களை துரத்தி துரத்தி கொல்லும். இதில கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1. அவை மனிதர்களோட முகத்தில ஒட்டிக்கும். ஒட்டுண்ணி மாதிரி வாழ்ந்து, கடைசியா வயிற்றைக் கிழிச்சுக்கிட்டு வெளியே வரும்.
2. ஏலியனோட இரத்தம் அமிலத்தன்மை (ஏசிட்) வாய்ந்தது. இரும்பைக் கூட உருக்கக் கூடியது.
3. இந்த மாதிரி, ஏலியன்கள் ஒவ்வொரு கிரகமா அழிச்சிட்டு வரும்.

அவதார்
இதில மனிதர்கள் ஒரு உலோகத்தைத் தேடி, வேற்று கிரகத்துக்கு போவாங்க. அங்கிருக்கும் உயிரினங்களை அழிச்சிட்டு நமக்குத் தேவையானதை எடுத்துட்டு வர முயற்சிப்பாங்க.

இந்தப் படத்தில் ஆச்சிரயமான விஷயங்கள்..
1. அந்த கிரகவாசிகள் இயற்கையை நேசிப்பவர்களாகவும் அவைகளோடு தொடர்புள்ளவர்களாகவும் இருப்பாங்க.
2. நம்ம ஹீரோ, அவர்களோடு சேர்ந்து, நம்ம கெட்ட மனிதர்களைத் துரத்திடுவாங்க. அதற்கு இயற்கையாக மிருகங்கள் கூட உதவி செய்யும்.
3. இந்தப் படத்தை பொறுத்த வரைக்கும், மனிதர்கள் ஏலியன்கள் மாதிரி செயல்படுவாங்க.

ஏலியன்! அவதார்!

நமக்கு முன்னாடி எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்திருக்கின்றன; அழிந்திருக்கின்றன. யாருக்கு வலிமை இருக்கோ, அவங்களால மட்டும்தான் இங்கு வாழ முடிஞ்சதது.

இயற்கையாகவே எப்பவும் சமநிலை இருந்திருக்கு. உணவுக்காகவோ அல்லது இருப்பிடத்துக்காகவோ ஒரு சில உயிரினங்கள் மற்றவைகளை வேட்டையாடி அழிச்சிருக்கின்றன. இருந்தாலும் இயற்கையாகவே ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. இத்தனைக்கும் அவைகளுக்கு நம்மைப் போல அறிவோ அல்லது கான்சியஸ் எனப்படும் உணர்வுகளோ இல்லை.

அப்ப எப்படி சமநிலை ஏற்பட்டிருக்கும்! தேவையில்லாம எதையும் அவைகள் அழிக்கவில்லை. இயற்கையை நம்பி வாழ்ந்திருக்கின்றன.

மனிதர்கள் நாம மட்டும், சுய அறிவோடும் சிந்தனையோடும் தோன்றியிருக்கிறோம். நம் அறிவு மேல் வச்சிருந்த நம்பிக்கையை இயற்கை மேல வைக்கலை.

கொடுமை என்னன்னா.., நமக்குத் தேவைப் படாத உயிரினங்களை அடியோடு அழிச்சிட்டோம். அதை விடக் கொடுமை, நமக்குத் தேவையான தண்ணீரையும் சுற்றுச்சூழலையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். மரங்களை அழிச்சிட்டு வருகிறோம்.

நாம்தான் இந்த பூமியோட வியாதி ( Matrix படத்தில வில்லன் சொல்றது). ஒரு நாள் இந்த பூமியில வாழ முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அப்ப என்ன பன்றது?

வாழத் தகுந்த மாதிரி வேறு கிரகத்துக்கு போலாம். அங்க போய்.. ஏலியன் படத்தில வர்ற மாதிரி அங்க எல்லாத்தையும் அழிப்போம்.

இதை எத்தனையோ தடவை படிச்சாச்சு! அப்ப எதற்கு வெட்டியா இந்த பதுவு?

நம்முடைய சிந்தனைகள் தெளிவானவை. நம்மால மற்ற உயிர்களைப் புரிந்து கொள்ள முடியும்.

நல்ல செயல்கள் நல்ல சிந்தனையிலிருந்துதான் வரும். முதல்ல சிந்திக்க ஆரம்பிப்போம். ஏதாவது நல்ல செயல்கள் வராமலா போயிடும்!

வாழ்வோம்! வாழ விடுவோம்! நமக்குள்ள ஒரு அவதார் இருக்கார்.


பின்குறிப்பு:
இதற்கு என்ன தீர்வுன்னு யோசிச்சுப் பார்த்தேன். ஒன்னும் புரியலை; தெரியலை. ஏதோ Matrix படம் பார்த்த பிறகு, ஒரு ஆர்வத்தில இந்தப் பதிவை எழுதிட்டேன்!

No comments: