Saturday, December 31, 2011

2011



மறுபடியும் ஒரு வருடம் முடிந்துவிட்டது. 2011 ல் செய்யவேண்டிய லட்சியங்கள் அலட்சியமாய் விட்டுவிட்டேன்.

சோதனைகளையும் வேதனைகளையும் எண்ணிப் பார்ப்பதில் என்ன இருக்கிறது?

சாதனைகளை பொன் எழுத்தில் பதிவு செய்யவேண்டியது முக்கியம் அல்லவா!

என்ன சாதித்துவிட்டேன் என்று யோசித்தால்.. அப்பப்பா!

தினேஷ் குமாரா? என்று ஆச்சர்யப்படும் அளவில் சாதித்ததாய் தோன்றுகிறது !!

வயலின்

வயலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஸ்வரங்களில் ஆரம்பித்து மேல் ஸ்தாயி வரிசையில் நின்று கொண்டிருக்கிறேன்.
இசை கடல் அளவு.காற்றுபோல் எங்கும் நிரம்பி இருக்கிறது. ஆனாலும்  சமுத்திரத்தில் ஒரு முறையேனும் முக்கி எழுந்து காற்றை உள்ளிழுக்கும் சந்தோஷம். வாழ்நாள் சாதனை.

இசை என்னை அனுமதித்தால் இன்னும் கூட கற்றுக்கொள்ளலாம் (தன்னடக்கம்).

பூமி (BHUMI)

பூமி என்னும் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தருகிறேன். இங்கு சேர்ந்த பிறகுதான் தெரிகிறது.. தொண்டு செய்ய எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களோடு எல்லாம் என்னை ஒப்பிடும் போது இதை என் சாதனை வரிசையில் சேர்க்க முடியாது.
என்னாலும் அன்பு செலுத்த முடியும் என்பது பெரிய சந்தோஷம்.

இசை

இந்த வருடம் ஆங்கில இசை ஆல்பங்களை ரசித்தேன். பிரிட்னியும்(Britney Spears) பேக்-ஸ்டிரீட் பாய்ஸ்(BackStreet Boys) பாடல்கள் மட்டும் கேட்ட நான் தி பீட்டில்ஸின்(The Beatles) பீட்-டும் கோல்ட்-பிளேயின்(Cold Play) கிதாரும் ரசிக்க முடிந்தது. ஆன்டனியோ விவால்டின்(Antonio Vivaldi) வயலின் இசையை மொபைல் ரிங்-டோனாக வைக்கும் அளவுக்கு ரசித்தேன் என்றால் பாருங்கள்!

நியான் நகரம் மற்றும் ரனம் சுகம் புக்கிசை என்ற ஆல்பங்களால் தமிழில் புதிய முயற்சிகளை அனுபசித்தேன். தமிழ் சினிமா பாடல்களையும் கேட்க ஆரம்பத்தில், எனக்கும் இசைக்கும் உள்ள இடைவெளி குறைந்த சந்தோஷம்.

புத்தகங்கள்

இந்த வருடம் படித்ததில் பிடித்தது.

தி. ஜானகிராமனின் மோகமுள்,
லா.சா. ராமமிர்தம் அவர்க்ளின் அபிதா,
எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்,
ஜோஹானா ஸ்பைரி-யின் ஹெய்டி,
எராகான்(Eragon) கடைசி (பாகம்) புத்தகம் இன்கெரிட்டென்ஸ்(Inheritance),
வெளிவந்துள்ள அனைத்து ஆர்டிமிஸ் ஃபௌல்(Artemis Fowl) பாகங்கள்.

தற்பெருமை போதும். இனி..

நன்றியுரை

வயலின் கற்றுக்கொள்ள வந்த நண்பர்கள் கிருஷ்ண குமார், தயாளன் & மாலதி அவர்களுக்கு நன்றி. கற்றுக்கொடுத்த ஆசிரியர் திரு.மதன் மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி!
(*** தயாளன் பார்க்கிறதுக்கு அப்பாவி மாதிரி இருக்கிறான நினைச்சேன். ஆனால் பாருங்க இந்த பையனுக்குள்ள இவ்ளோ திறமை இருக்குதுன்னு ஆச்சர்யப்பட வைச்சுட்டான். அவன் வயலின் கத்துக்க காட்டின ஆர்வத்துல நாங்களும் ஆர்வமாயிட்டோம்.)

பூமி இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற உறுதுணையாக இருந்த நண்பர் பிஜீ & உற்சாகப்படுத்திய நண்பர் ராஜ்குமார் அவர்களுக்கும் நன்றி!

இசை ஆல்பங்களை அறிமுகப்படுத்திய தோழி சரண்யா அவர்களுக்கு நன்றி!


இன்னும் என் பதிவுகளை மனம் தளராமல் படிக்கும் நண்பர் கலைவாணி அவர்களுக்கு நன்றி!


பொது அறிவு செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் என்னுடனும் விவாதிக்கும் நண்பர் சகாயராஜ் அவர்களுக்கு நன்றி!

என் சிந்தனைகளை சீர் செய்யும் மரியாதைக்குரிய பிரபு ஸார், ரங்கநாதன் ஸார் & C.P. ராகவேந்திரன் ஸார்..

எப்பொழுதும் அன்பு செலுத்தும் நல்ல நண்பர்கள் சுப்பிரமணியன், பிந்து, பிரபு, முருகானந்தன் ,ஜெயகிருஷ்ணன் & அனைத்து நண்பர்களுக்கும்..

எல்லாவற்றிற்கும் கூட இருக்கும் என் 'அன்புத் தம்பி' கமலக்கண்ணன்..

என் அப்பா, அம்மா & கடவுளுக்கு..

இவர்களுக்கு நன்றி சொல்வதை விட..
புத்தாண்டு வாழ்த்துக்கள்.


பி.கு:
*** இவ்வாறு எழுதுமாறு தயாளன் கேட்டுக்கொண்டார்.

5 comments:

Dhayalan said...

*2011ல மட்டும் லட்சியத்த கடைபிடித்தியா?

*வயலின் வித்துவான் ஆக வாழ்த்துக்கள்!

*அயோக்கியனுக்கு பூமி(BHUMI)ல என்ன வேலை?

*2012ல சாதனைகளை தொடர வாழ்த்துக்கள்!

Dinesh said...

//அயோக்கியனுக்கு பூமி(BHUMI)ல என்ன வேலை?

பாவம்.. Bijuஐ என் திட்டுற

Anand N said...

இசையெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். வயலின் கத்துக்கிட்டேன்னு என்ன அடக்கமா சொல்லியிருக்க. தங்கள் சாதனைகளை வாழ்த்த வயதில்லை, ஆதலால் வணங்குகிறோம்.

Unknown said...

Isai engerunThu varuthu sir?

Dinesh said...

@Unknown person
யாருக்குத் தெரியும்?