Monday, September 19, 2011

நூலகம்


பத்தாவது படிக்கும் போதுதான் முதல் முறையாக 'கட்' அடித்தேன். அது கூட மதிய உணவு வேளையில் பள்ளியை விட்டு வெளியே போனேன். போன இடம் எங்க ஊர் பொது நூலகம்.



அங்கு உறுப்பினரான பின், வாரம் ஒரு முறையாவது செல்லாமல் இருந்ததில்லை. விடுமுறை நாட்களில், வெள்ளிக் கிழமை எடுத்த புத்தகங்களை, படித்து முடித்து ஞாயிற்று கிழமையே திருப்பிக் கொடுத்தது பலமுறை.



நூலகத்திலேயே புத்தகம் படிப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. புத்தகங்கள் எடுத்து வீட்டில் படிப்பதுதான் விருப்பம்.


என்னுடைய ஒவ்வொரு தேடலும் அந்த நூலகத்திலிருந்தே ஆரம்பித்தது. நான் தொலைந்து போகும் போதெல்லாம், எனக்கு புகலிடம் 

கொடுத்து, என்னை திருப்பிக் கொடுத்ததும் அந்த நூலகம்தான். 'நான்’ என்று விளக்கம் கொடுக்கும் வார்த்தைகள் எல்லாம், அங்கிருந்துதான் எடுக்கப்பட்டது. 






எங்க ஊரில் எனக்கு பிடித்த இடமானது, அந்த நூலகம்.


*****

சென்னையில் கடல் எவ்வளவு பிரம்மாண்டமாய் உணர்ந்தேனோ, அது போல்தான் கன்னிமரா நூலகமும் தோற்றம் அளிக்கிறது.

அந்தக் கடலில் பிடித்த புத்தகங்களை தேடுவது எளிதல்ல. அவைகளைக் கண்டுபிடிப்பதற்கு கம்ப்யூட்டரில் தேடும் வசதிகள் உள்ளன. அதனால் குறிப்பிட்ட அலமாரியில் தேடுவது எளிதாயிற்று.

ஆனாலும் நினைத்த புத்தகங்களைத் தேடும் போதுதான், பல புத்தகங்கள் பிடித்தவிதமாய் கிடைக்கின்றன.

வாழ்க்கையில் தேடியது கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்தது பிடிக்கும் இடமாய் இருக்கிறது, நூலகம்!

உங்கள் அருகில் இருக்கும் நூலகத்தை 'மிஸ்' பண்ணாமல், ஒரு முறையேனும் தரிசித்து பாருங்கள்!

*****

பி.கு:
இபோழுது இன்டர்நெட்டில் புத்தகங்களை ரிசர்வ் செய்யவும், எடுத்த புத்தகங்களை புதுப்பிக்கவும், கன்னிமரா நூலகம் வசதிகள் ஏற்படுத்தி உள்ளன.


9 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மை தான் நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் வலைப்பதிவின் தலைப்பே..

அஃறிணை என்று இருக்கிறது..
மனிதம் பற்றிய சிந்தனைகள்

என்னும் விளக்கமும் அருமை..

அஃறிணை பேசுகிறேன் என்னும் எனது இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_13.html

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் வலைப்பதிவின் தலைப்பே..

அஃறிணை என்று இருக்கிறது..
மனிதம் பற்றிய சிந்தனைகள்

என்னும் விளக்கமும் அருமை..

அஃறிணை பேசுகிறேன் என்னும் எனது இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_13.html

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பா நூலகம் குறித்த எனது பதிவைக் காண..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_11.html

என்னும் இணைப்புக்குள் வரவும்..

ரசிகன் said...

சூப்பர்.. :) பதிவ படிச்சி முடிக்கிற இந்த நிமிஷம், கம்ப்யூட்டர Shut Down பண்ணிட்டு லைப்ரரி தேட தோணுது... All the catchy streaks are already Highlighted.

Anand N said...

நாங்கெல்லாம் ரெண்டாவதுலேயே library member ஆனவங்க..எங்க கிட்டயேவா?

Dinesh said...

@ Anand

டேய்.. உங்கூட பள்ளிக்கூடத்திலியே பழகியிருந்தா, நான் கூட ரெண்டாவதுல நூலகம் போயிருந்திருக்கலாம்! (ஆனால் நிச்சயம் உருப்பட்டிருக்க மாட்டேன்)

ரசிகன் said...

//ஆனால் நிச்சயம் உருப்பட்டிருக்க மாட்டேன்//
இப்ப மட்டும்..??

இப்படிக்கு,
Anand N :)

rangs said...

'நான்' என்ற தேடல் முடிவதில்லை நண்பா!
அப்படி முடிந்தால், அதுவே ஞானத்தின் எல்லை!