Thursday, September 15, 2011

ரணம் சுகம்



ஒரு கதை, சில கவிதைகள்,  இசை தொகுப்பு!

'ரணம் சுகம்' என்கிற மியூசிக்கல் நாவல், நான் ரசித்து படித்து/கேட்ட ஒரு புது அனுபவம். 'பாதை' என்கிற மியுசிக்கல் பேண்ட் நண்பர்களின் ஒரு புது முயற்சி.


கதை - நம்ம கற்பனைகளில் கதாபாத்திரங்களை உலா வரச்செய்யும் ஊடம்
கவிதை - வார்த்தைகளோட அழகையும் சுவையையும் ரசிக்க வைக்கும் உணர்வுகளின் தொகுப்பு
இசை - கதை/கவிதைகளால் சொல்ல முடியாம போகும் இடங்களில் கூட நுழையும் காற்று, மொழியை மீறிய அனுபவம்.


இந்த மூன்றையும் தனித்தனியே ரசிச்சிருக்கேன். மூன்றையும் சேர்ந்து அனுபவிக்க கிடைத்த முதல் அனுபவம், ரணம் சுகம் என்கிற புக்கிசை!

*****

"தேடிச்சோறு நிதம் தின்று" பாரதி வரிகள் புதுமையாய் கேட்கும்படி இருந்தது.

எனக்கு பிடித்த பாடல்/கவிதை வரிகள்:

"பெண்ணே  உன் கண்கள் கொஞ்சம் மூடு
தொடர்ந்து மின்னல் பார்க்கும் சக்தி
ஆண்டவன் தரவில்லை எனக்கு"

முனுமுனுக்க வைத்த பாடல் வரிகள்:

"காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள் விழியே
ஒரு பார்வை அள்ளவிடுவாய் அவளை"
  
கதையில் பிடித்தது:

"பியானோவின் வெள்ளைகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவளுக்காக மட்டும் நான் செய்த காதல் இசை. அவளை நினைத்து இசையமத்த போது பியானோவின் கருப்பினைத் தொட மனம் வரவில்லை."

இதுதான் காதல் மனசு!

"கடலுக்கு யாரும் உண்மையில் சொந்தமில்லை. வருவார்கள், பார்ப்பார்கள், கால்கள் நனைத்து விளையாடுவார்கள், ரசிப்பார்கள், நேரம் வந்ததும் வீட்டுக்கு செல்வார்கள். அவளும் அதேதான் செய்தாள், வந்தாள், என்னில் சோகம் நனைத்தாள், என் தனிமை கேட்டாள், ரசித்தாள், ரசிக்க வைத்தாள், நேரம் வந்ததும் சென்றுவிட்டாள்."

நல்ல உவமானம்!

*****


புத்தகம் படிக்கும் போது, இடையில நிறுத்தி, இசையோடு பாடலை கேட்பது நல்லாத்தான் இருக்கு!

உங்களுக்கு கூட பிடிக்கும்! படிச்சு/கேட்டுப் பாருங்க..

2 comments:

Anand N said...

குழலினிது யாழினிது...

Anand N said...

மன்னிக்கவும். எப்பவும் போல தெனாவெட்டா comment பண்ணிட்டேன்.

ஆனா உடனே இந்த ஆல்பத்தை வாங்கிட்டேன்.

ரொம்ப நாள் கழிச்சு மனம் விட்டு சிரிச்சேன்.

இன்னும் படிச்சு/கேட்டு முடிக்கல. முடிச்சிட்டு ஒரு review போடறேன்.

எல்லாரும் என்னோட blogல வந்து படிங்க.