Wednesday, January 5, 2011

கலிகாலம்

கதைக்கு முன்..

1. இந்த கதை வெறும் கற்பனை. ஒரு விஷயம் மட்டும்தான் உண்மை.
2. இது சீரியஸாக எழுதப்பட்டது. அதனால் சீரியஸாக படிக்கவும். ஆனால் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!



கலிகாலம்

உங்கள் பெயர் ? ‘

‘ ஸ்நேதி ‘

‘ எந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் ? ‘

‘ கொத்தடிமை வேலைக்கு! ‘

‘ உங்கள் அனுபவம் ? ‘

‘ ஐந்து வருடங்கள் அடிமை வேலை பார்த்திருக்கிறேன். ‘

எண் ஏழு கோடியே இருபத்தேழு ஒரு பகா எண். உண்மையா? பொய்யா? ‘

‘தெரியவில்லை! ‘

‘நன்று. நீங்கள் மனிதர்தான். எந்திரன் அல்ல. சில நிமிடங்களில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள். காத்திருக்கவும்.’

******

இடம்: சென்னை, திருக்குறள் கட்டிடம்
நாள்: செவ்வாய் கிழமை, 19 , மார்கழி மாதம், பிரமாதீச வருடம் (5–JAN–2094)

அவன் வேலை நிமித்தமாக நிலாவிலிருந்து வந்திருந்தான். இப்பொழுது காத்திருக்கிறான்.

இந்த கதை நடக்கும் நாளை, நாம் பார்க்கப்போவது அரிது என்பதாலும், கற்பனை கதை என்று அறிமுகப்படுத்தியாலும், சில விவரங்கள்.

திருப்புமுனையாக தமிழகத்தில் 2011 வது வ்ருடம் நடந்த தேர்தலில், நடிகர் விஜய் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆனார். அவருடைய 21 வருட ஆட்சியில் ( தமிழ் பொற்காலம்) தமிழ் மொழி உலக மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பணத்தின் மதிப்பு மிகவும் உயர்ந்ததால், மீண்டும் காசு-பைசா-அனா-ரூபா கணக்குகள் வந்தன. ( 3காசு-1 பைசா, 4 பைசா-1 அனா, 16 அனா-1ரூபா).

பூமியில் நிலத்தின் விலை மிகவும் அதிகரித்ததால், மக்கள் நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நதநந்தா, பூமி சூரியனை சுற்றவில்லை என்றும், சூரியன், பூமி, மற்ற கிரகங்கள்தான்  நிலவை கண்டபடி சுற்றுகிறது என்றும் நிரூபித்தார். அதனால் நிலவிலும் நிலத்தின் விலை வேகமாக அதிகரித்தது,


“ஸ்நேதி! அறை எண் ‘ஒன்று மூன்று மூன்று பூஜ்யத்திற்கு’ வரவும்” சத்தமாக அழைப்பு வந்தது.

மின் தூக்கி முன் சென்று 1330 எண்ணை அழுத்தினான். அருகில் வேறு யாருமில்லை.

ஒவ்வொரு அறையாக அவன் முன் வந்து சென்றது. 1330 என்று எழுதிய அறை வந்து நின்றது. ( இந்த வகை மின் தூக்கி அரிய கண்டுபிடிப்பு! புரியாதவர்கள், மீண்டும் படிக்கவும்)

அவன் கதவை திறந்து உள்ளே சென்றான். ஊஞ்சலில் ஒருவர் அமர்ந்திருந்தார். நிச்சயம் அவர்தான் நேர்முகத்தேர்வு நடத்தப் போகிறவர்.

' வணக்கம் ஐயா! ' கைகூப்பிவிட்டு, நேராக கைகட்டி நின்றான்.

' வணக்கம். உன்னை பற்றி கூறு! '

' என் பெயர்  ஸ்நேதி. இப்பொழுது நிலவில் குடியிருக்கிறேன். பிறந்தது வளர்ந்து எல்லாம் சென்னைதான்.
ஐந்து வருடங்கள் நிலவில் அடிமையாக வேலை பார்த்திருக்கிறேன்.
எட்டு மணி நேர வேலையென்றால், பன்னிரண்டு மணி நேரம் வரை அலுவலக்த்தில் இருப்பேன். தேவையென்றால் இருபது மணி நேரம் கூட இருப்பேன்.
மாதத்திற்கு ஒருநாள் மட்டும்தான் ஓய்வு விடுமுறை எடுப்பேன். '

அவர் முகத்தில் திருப்தி. ' உன் பலம் ? '

' என் பலம் தேவைப்படுகிற அளவுக்கு பொய் பேசுவேன். அடுத்தவர்களை ஏதேனும் சிக்கலில் மாட்டிவிடும் பட்சத்தில் உண்மைகூட பேசுவேன் `

' நன்று ' அவர் முகத்தில் புன்னகை. ' உன் பலவீனம் ? '

' உண்மை பேசி மாட்டிவிட்டதை, அவரிடமே பெருமையாக சொல்லிவிடுவேன். ‘

' மிக்க நன்று. சம்பளம் நான்கனா. வேலை செவ்வாய் கிரகத்திலென்றால் சம்மதமா ? '

' செவ்வாய் கிரகம் என்றால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி '

' நீங்கள் செல்லலாம். உன் வேலைக்கான அழைப்பு விரைவில் தெரிவிக்கப்படும். "

' நன்றி ஐயா '

அவன் வெளியேறுவதை பார்த்து நினைத்துக்கொண்டார். 'இந்த அடிமை மிகமிக திறமைசாலி. வாய்தான் காதுவரை நீளும்!'

*****

அவன் பறக்கும் தொடர்வண்டியை பிடித்து நிலவிற்கு வந்து சேர்ந்தான். அவன் வீட்டிற்குள் வந்ததும் அப்பாவுடைய குரல் கேட்டது. சித்திரை மாதம் வந்தால் 110 வயது!

‘ உலகத்தை சுத்திட்டு வரீயா. உன்னை செவ்வாய் கிரக்கத்தில வேலைக்குச் சேர சொல்லி அழைப்பு வந்திடுச்சு. ‘

சந்தோஷம். ஆனாலும் அவன் எதுவும் பேச வில்லை.

மீண்டும் அப்பா குரல் கேட்டது.

" அந்த காலத்துல, வேலை தேடி ஈரோட்டுலிருந்து சென்னைக்கு குடிவந்தோம்.
இப்ப நிலாவில வீட்டு வாடகை ஏறிடுச்சுதன்னு, வேலையை மாத்திட்டு செவ்வாய் கிரக்த்துக்கு போறீங்க!"

5 comments:

rangs said...

அட கடவுளே இதுலேயும் கணக்கா ?

Shalini(Me The First) said...

அட ஸயன்ஸ் ஃபிக்சன் (ஸாரி தமிழ்ல அத எப்டி சொல்வாங்கன்னு தெரில:()

//நடிகர் விஜய் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆனார். //
ஏன் ஏன் இந்த கொலவெறி?!

//என்ன உலகத்தை சுத்திட்டு வர்றியா//

ஹா ஹா ஹா

அனு said...

நம்ம ரசிகன் ஃபாலோ பண்ற ப்ளாக்காச்சேன்னு வந்தேன்.. நிஜமாவே கதை(??!!) நல்லா இருக்கு.. இன்னும் நிறைய எழுதி மேலும் உயர வாழ்த்துக்கள்!!!

//இந்த கதை வெறும் கற்பனை. ஒரு விஷயம் மட்டும்தான் உண்மை.//

இல்ல.. அதுதான் இருக்கிறதிலயே பெரிய கற்பனை.. ;)

அனு said...

உங்க கதைல தான் human-ஆன்னு செக் பண்ணனும்.. கமெண்ட்ல எதுக்குங்க செக் பண்ணனும்??

நாங்க எல்லோரும் Bots இல்லைங்க.. ஸோ, இந்த word verificationஅ முதல்ல தூக்குங்க...

Maheswari Murthy said...

Interesting story!! Expecting many more cute stories :)