Tuesday, March 8, 2011

கோபல்ல கிராமம்


“என் மக்களே,எங்கேயோ ஒரு தேசத்தில் பிறந்து,எங்கேயோ ஒரு தேசத்தில் வந்து வாழ வேண்டியிருக்கிறதே என்று நினைச்சி மனம் கலங்க வேண்டாம்.எல்லாம் பூமித் தாயினுடைய ஒரே இடம்தான்.
அவளுடைய கையிலுள்ள ஒரு விரலிலிருந்து
நீங்க இன்னொரு விரலுக்கு வந்திருக்றீக; அவ்வளவுதான்.நீங்க ஒண்ணுக்கும் பயப்பட வேண்டியதில்லை.உங்களோடேயே சதா நா உங்களுக்குத் துணை இருப்பேன்.” 
ஒரு பாட்டு பாடுவதைப் போல பாட்டி, அம்மன் அருள் வாக்காய் சொன்னாள்.

இது கி.ரா (எ) கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ புத்தகத்தில் படித்தது.



தெலுங்கு தேசத்திலிருந்து குடிபெயர்ந்த ஒரு கிராமத்து மக்களின் கதை. அவர்கள் காட்டை அழித்து அந்த கிராமத்தை உருவாக்குவதை அழகாக விவரிக்கிறார்.

கிராமத்திலிருந்த மனிதர்களின் சுவராஸ்யங்களையும் குறிப்பிடுகிறார். மனிதர்கள்தான் எத்தனை சுவராஸ்யமானவர்கள். (பழகி மட்டுமல்ல இந்த புத்தகத்தை படித்தும் தெரிந்து கொள்ளலாம்)

மக்களின் கூட்டு உழைப்பில் வயல்வெளிகள் உருவாகின்றன. குடும்பத்திற்கு தகுந்தாற் போல் பங்கிட்டுகொள்கிறார்கள்.

கொள்ளையர்கள் கிராமத்தை சூறையாட வரும்போது, மக்களின் வீரம் வெளிப்படுகிறது. அவர்களை விரட்டியடிக்கிறது.

ஒரு குற்றவாளி உருவாகும்போது, கிராமம் அவனை தண்டிக்கிறது. 'கழுவில் ஏற்றுதல்' என்ற தண்டனையின் கொடூரத்தில், அவன் மீது இரக்கம்தான் வருகிறது.


இந்த புத்தகம் - கதை மட்டுமல்ல. ஒரு கலாச்சாரத்தின் பதிவு.

2 comments:

Shalini(Me The First) said...

இன்னும் கொஞ்ச நாள்ல கலாச்சாரத்தை இப்டி தான் தெரிஞ்சுக முடியும் போல !

Dinesh said...

காலத்திற்கு தகுந்த மாதிரி கலாச்சாரமும் மாறும். பழைய கலாச்சார த்தை புத்தகத்தில் படிச்சுத்தான் தெரிஞ்சுக முடியும்