Sunday, November 28, 2010

பூஜ்யம்


கடவுள் ஒரு பூஜ்யம்

பூஜ்யம் - "இல்லை" என்ற ஒரு எண்ணிக்கையை குறிக்கத் தேவைப்பட்ட ஒரு குறியீடு.

கணிதத்தில் மிகவும் தேவையான ஒன்று. இது இல்லாமல் கணிதத்தில் பலவற்றை விளக்கியிருக்க முடியாது. இதுவே மையமாகத் திகழ்கிறது.
பூஜ்யத்திற்கு நேர் எதிர் என்ற மதிப்புகள் கிடையாது (Neither positive nor negative).

ஒரு எண்ணை முன்னிருத்தி பூஜ்யத்தை பின் தள்ளினால், மதிப்பு குறைவு (01).
அதுவே பூஜ்யத்தை முன்னிருத்தினால், நல்ல மதிப்பு (10).




கடவுள் ஒரு பூஜ்யம்!

கடவுள் - இல்லாத ஒன்று என குறிக்கப்படலாம். ஆனால் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று. இது இல்லாமல் இங்கு பலவற்றை விளக்கவே முடியாது. இதுவே மையமாகத் திகழ்கிறது.

கடவுளின் செயல்களில் நல்லவை கெட்டவை என்று எதுவுமில்லை.

நம்மை முன்னிருத்தி கடவுளை பின் தள்ளினால், மதிப்பு குறைவு.
அதுவே கடவுளை முன்னிருத்தினால், நல்ல மதிப்பு.

சரி போதும் இந்த புதிய ஒப்பீடல்!



கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்ற கேள்விக்கெல்லாம் அப்பாற்பட்டு, கடவுள் தேவைப்படுகிறார்.

எல்லா நம்பிக்கைகளும் கைவிடும் போதும்,
விடையில்லாத கேள்விகளுக்கெல்லாம் கடவுள் தேவைப்படுகிறார்.

நாத்திகர்கள் திறமைசாலிகள். தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள். அவர்களுக்கு கடவுள் தேவை இல்லாமல் இருக்கலாம்.

எங்களின் வாழ்க்கை பாதைக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது.
வழுக்கி விழும்போது எழுந்து நடக்க ஒரு தோள் தேவைப்படுகிறது.தேவைப்படுபவர்களுக்கு கடவுள் எல்லாமுமாய் இருக்கிறார்.
பூஜ்யம் என்ற குறியீடு முழுமை என்பதையும் குறிக்கிறது.



கணிதம்
எனக்கு கடவுளை விட மதத்தின் மீது நம்பிக்கை அதிகம்.

கடவுள் பூஜ்யம் என்றால், மதம் என்பது கணிதம்.
கடவுள் வெளிச்சமாய் இருக்க, மதம்தான் வாழ்க்கை பாதையாய் இருக்கிறது.
மதம் - மனிதனின் கலாச்சாரம். பண்பாடு.

எல்லோருக்கும் புரியும்படியாய் பல மதங்களாய் எழுதப்பட்டிருக்கிறது.
அனைத்து மதங்களும் சகமனிதனை நேசிக்கத்தான் சொல்கிறது.
தன் மதம் தெளிவாய் புரியும்போது, பிற மதங்களில் குறைகள் தெரியாது.

இந்த உலகிற்கு தேவையானது
ஒரே மதம் ஒரே கடவுள் அல்ல!
எல்லா மதங்களுக்கும் பொதுவான, அன்புதான்.

12 comments:

ரசிகன் said...

@தினேஷ்.

//கடவுள் ஒரு பூஜ்யம்!//

அப்போ... கணக்கு பரீட்சைல பூஜ்யம் வாங்கியவன் கடவுளை அடைந்த யோகி ஆவான்... அடடடடா..!!! இது புரியாம என் கணக்கு வாத்தியார்.... அவரரரரர.... ம்ம்ம்.. முதல்ல இந்த போஸ்டை அவருக்கு பண்ணிட்டு பேசிக்கறேன்..

ரசிகன் said...

@தினேஷ்
நாங்களும் தத்துவம் சொல்லுவோம்ல.. (ரத்தத்துக்கு ரத்தம்)
I * 0 = 0 => கடவுளோடு ஒன்றியவன் தானும் கடவுளாகிறான்..
I / 0 = ∞ => கடவுள் வகுத்த வழி நடந்தால், முடிவிலா பேரின்பம் கிட்டும்..
I = I + 0 => கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறார்
(என்ன ‍-(minus) காணோமா..? ஐ!ஐ!.. எல்லாத்தயும் நானே சொல்லுவேனா... அது Assignment உங்களுக்கு.. )

ரசிகன் said...

Those comments are just for fun.. I really need to get bit more sharper to travel parallelly with you and to reply in equal slang and frequency...

Shalini(Me The First) said...

really i like urs "abt me"
n urs "boojiyam"...
plz remove word verification:)

//எங்களின் வாழ்க்கை பாதைக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. வழுக்கி விழும்போது எழுந்து நடக்க ஒரு தோள் தேவைப்படுகிறது.தேவைப்படுபவர்களுக்கு கடவுள் எல்லாமுமாய் இருக்கிறார். பூஜ்யம் என்ற குறியீடு முழுமை என்பதையும் குறிக்கிறது.//

உண்மைதான் சகோ!

//கடவுள் வெளிச்சமாய் இருக்க, மதம்தான் வாழ்க்கை பாதையாய் இருக்கிறது. மதம் - மனிதனின் கலாச்சாரம். பண்பாடு.//

நாம் சறுக்கி விடாமல் காப்பதும் அது தான் இல்லியா!

ரசிகன் said...

@Dinesh
ஹ்ம்ம்ம்.. இப்படி கமெண்ட் போட்டு 4 நாளா ரிப்ளை பண்ணலைன்னா மக்கள் எப்படி ஆர்வமா கமெண்ட் போடுவாங்க..? நீங்க எப்படி பிரபல பதிவர் ஆகறது... ?? தூங்கினது போதும்.. Wake up, Wakeup... Me the firstன்னு போடாம இவ்ளோ பெரிய Comment போட்டிருக்கற‌ Shalini க்கு Atleast ஒரு welcome சொல்லுங்க‌...

Shalini(Me The First) said...
This comment has been removed by the author.
Shalini(Me The First) said...

அச்சச்சோ தினேஷ், ரசிகன் எழுந்திரின்னு சொல்றவரையா தூங்குவாங்க?!
அய்யொ அவரே 12 மணிக்கு தான் எழுந்திரிப்பாரு:)

ரசிகன் said...

@Shalini
எப்பொ எந்திரிக்கறோம்ன்றது முக்கியம் இல்ல...
எந்திரிச்சி என்ன பண்ணினோம்றதுதான் முக்கியம்..
ஹா.. ஹா.. ஹா.. !!!

Shalini(Me The First) said...

@ரசிகன்
அட அட என்ன ஒரு தத்துவம்
எப்டிங்க இப்டில்லாம்?!
உங்க திறமைக்கு நீங்க எங்கியோ இருக்க வேண்டிய ஆளு ;)

@தினேஷ்
உங்க ப்ளாக் பத்திரம் :)))

Dinesh said...

@shalini
வாங்க, வாங்க..
வந்து படிச்சதற்கு நன்றிங்க!
எல்லாத்தையும் படிச்சுப் பாருங்க..
புரிஞ்சா, அடுத்த பகுதியை படிங்க.
புரியலைன்னா திரும்ப திரும்ப படிங்க!

@ரசிகன்
மிக்க நன்றிங்க!

@me
நல்லா எழுதினா, நிறைய பேர் படிச்சு COMMENT எழுதுவாங்கன்னு நினைச்சேன்.
ஆனால் இப்பத்தான் புரியுது,
நிறைய COMMENT படிச்சா, நல்லா எழுதலாம் போலிருக்கே!

Unknown said...

one small doubt in mathematics..

Lets take two natural numbers 1 & 2

12 is value less &
21 is value more

So any numbers if we interchange value can change provided they are not the same numbers....

Each and everything in the world has significance including GOD as every number has its own significance..[Not only zero]

ரசிகன் said...

@subramanian
//So any numbers if we interchange value can change provided they are not the same numbers....//

True. But the speciality of 0 is that, it always increases the value when swapped to suffix some other number.Where as in case of other numbers significance depends on the neighbouring number.